Home செய்திகள் இந்து மதத்திற்கு எதிரான அண்மைக்கால நடவடிக்கைகள் வேதனைக்குரியது-சர்வதேச இந்து இளைஞர் பேரவை

இந்து மதத்திற்கு எதிரான அண்மைக்கால நடவடிக்கைகள் வேதனைக்குரியது-சர்வதேச இந்து இளைஞர் பேரவை

இந்து மதத்திற்கு எதிரான

மிக அண்மைக் காலமாக இந்து மதத்திற்கு எதிரான, இந்துமதம் சார்ந்த விக்கிரகங்கள் மற்றும் சிலைகள் களவாடப்படுவதும் சேதமாக்கப்படுவதும் அதிகரித்துள்ளன என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவரும், வவுனியா ஆதிவிநாயகர் ஆலய பிரதமகுருவுமாகிய சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்தார்.

மிக அண்மைக் காலமாக இந்துக் கடவுள் விக்கிரகங்கள் களவாடப்படுவதும் அவை கடத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. அத்தோடு ஓர் மதத்திற்கு எதிரான வன்மப் போக்கு ஏனையோரிடத்தே அதிரகரித்திருக்கின்றது என்றால் அவர்கள் பண்படுத்தப்பட வேண்டியவர்கள் அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் எனவே அண்மையில் யாழில் களவு போன விக்கிரகங்கள் கடத்தப்பட்டு அவை கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அத்தோடு அவற்றைக் கடத்துபவர்கள் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியது. ஆனால் தற்போதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர் வரும் இரு கிழமைகளில் கும்பாபிஷேகம் காண இருந்த ஆலயத்தின் விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது இது இந்து மக்கள் மத்தியில் வேதனைக்குரிய செயலாக இருக்கிறது.

இந்துக்கள் யாருமே ஏனைய மதத்தினர்களுக்கு ஏதிராக மதப்பரம்பல்களையோ அல்லது இவ்வாறு சிலைகளை உடைக்கின்ற செயல்களையோ செய்வதில்லை. அந்நியப் படையெடுப்பு காலம் முதல் இற்றை வரை பல நூறு ஆலயங்களும் ஆலயச் சொத்துக்களும் அழிக்கப்படும் சூறையாடப்பெற்றும் வந்துள்ளது. தற்காலத்தே மதநல்லிணக்க குழுக்கள் அமைப்புகள் என்னும் பெயரில் உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று தெரியவில்லை. ஓர் மதவழிபாடு சார்ந்தவைகள் கொச்சைப்படுத்தப்படுத்தப்படும்போது அல்லது ஆக்கிரமிப்பு அழிப்புக்குள்ளாகும் போது இவ்வமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன. பேரளவில் இருப்பதற்கு இவை இல்லாமல் இருப்பது சிறப்பு ஜனாதிபதின் சமய விவகாரங்கங்களிற்குரிய பொறுப்பானவர்கள் ஏனக் கூறிக்கொள்வோரும் படத்திற்கும் பகடைவாழ்த்துகளுக்கும் செலவழிக்கும் நேரத்தை இவ்வாறான அராஜகங்கள் இடம்பெறுகின்றபோது ஏன் தலையினை உள்ளே இழுத்துக்கொள்கின்றனர் என்று தெரியவில்லை.

அவரவர்களுக்கு அவரவர் சமயம் சார் நம்பிக்கைகளை சிதைக்க முற்படும் போது சமயங்களிற்கான முரண்பாடுகள் தோன்றும் அதனை தடுக்க வேண்டுமானால் சமயம் சார் அமைப்புகள் ஒன்றுதிரண்டு தமது எதிர்புகளை தெரிவிக்க வேண்டும். தட்டிக் கேட்க வேண்டியவர்கள் கண்மூடிக்கொண்டு இருப்பதால் ஏந்தப் பலனும் இல்லை எனவே உடனடியாக இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் அதற்காக சமயம் சார்ந்தோர் நல்ல வழிகாட்டல்களை செய்ய வேண்டும். மனமாற்றம் வரும் வரைக்கும் எத்தனை மதங்கள் மாறியும் பலன் இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version