அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிப் பிரயோகம்

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிப் பிரயோகம்

அமெரிக்காவில் கடந்த புதன்கிழமை (01) மீண்டும் புனித பிரான்சிஸ் வைத்தியசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

கடந்த வாரம் சிறுவர் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் ஒக்லகோமா பகுதியில் இது இடம்பெற்றுள்ளது. தன்னியங்கி துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியுடன் தாக்குதல் நடத்திய ஆயுததாரியும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது அமெரிக்க காவல்துறையினர் 3 நிமிடங்களுக்குள் இடத்திற்கு விரைந்து சென்றதால் பல உயிரிழப்புக்களை தவிர்க்க முடிந்துள்ளதாக அதன் பிரதம அதிகாரி எரிக் டல்கிலிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் றொப் பாலர் பாடசலையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 19 சிறுவர்களும், இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.

கடந்த வருடம் 61 துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 52 விகிதம் அதிகம் எனவும் அமெரிக்காவின் எப்.பி.ஐ அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் 30 மாநிலங்களில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகங்களில் 103 பேர் கொல்லப்பட்டிருந்ததுடன், 140 பேர் காயமடைந்திருந்தனர். 2014 ஆம் ஆண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரையிலும் வருடம்தோறும் 20 சம்பவங்களும், 2017 ஆம் ஆண்டு 31 சம்பவங்களும், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் 30 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

Tamil News