ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கியிருந்த வாக்குறுதியை ரணில் மீறிவிட்டார் – சுமந்திரன்

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கியிருந்த வாக்குறுதியை ஜனாதிபதி மீறிவிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் கைவிடப்பட்ட இந்த போராட்டம் இம்முறை 25 மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக வடக்கு கிழக்கிற்கு வெளியே மேற்கொள்ளவிருக்கும் இந்த போராட்டத்திற்கு மாணவர்களும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் ஆதரவை வழங்குவார்கள் என்றும் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.