அரசின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக அணிதிரளுங்கள்-என்.பிரதீபன்

IMG 3882 அரசின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக அணிதிரளுங்கள்-என்.பிரதீபன்

நாட்டின் சொத்துக்களையும் இறைமையையும் தாரை வார்க்கும் அரசின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக அணி திரளுமாறு புதிய ஜனநாயக மாக்கிச லெனினிச கட்சியின் வன்னி மாவட்ட செயலாளர் என். பிரதீபன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,

“கோட்டாபாய மகிந்த தலைமையிலான அரசாங்கம் மக்கள் விரோத செயற் பாடுகளை தொடர்ந்து கொண்டிருப்பதனை அண்மைக் காலங்களாக அவதானிக்க முடிந்துள்ளது. உணவுப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் சடுதியான விலை அதிகரிப்பு நாட்டு மக்களை, குறிப்பாக உழைக்கும் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது.

அத்துடன் நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளின் உரப் பிரச்சனைக்கு உரிய மாற்று தீர்வுகளை காணாமல், பசளையை நிறுத்தியது விவசாயிகளின் தலையில் கல்லைப் போட்டு கொல்வதற்கு சமமானது. அத்துடன் கொத்தலாவலை இராணுவ பல்கலைக் கழக சட்ட மூலமானது உயர் கல்வித்துறை இராணுவ மயமாக்கப்படும் அபாய நிலமையை ஏற்படுத்தி யுள்ளது.

இதே வேளை  நாட்டின் சொத்துக்களையும் இறைமையையும் தாரை வார்க்கும் அரசின் செயற் பாடுகளை கண்டிக்கும் அரசியல் சமூக செயற் பாட்டாளர்களை காவல் துறையின் அராஜகத்தை கட்ட விழ்த்து கைது செய்து தனிமைப் படுத்தும் எதேச்ச திகாரமான செயலை இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது.

இவற்றை முன்னிறுத்தி அரசின் இத்தகைய செயற்பாடுகளை கண்டித்து எதிர் வரும் 17 ஆம் திகதி சனிக் கிழமை வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப் படவுள்ளது.

குறித்த போராட்டத்தை வலுப் படுத்துமாறு புதிய ஜனநாயக மாக்கிச லெனினிச கட்சியின் வன்னி மாவட்ட கிளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் அரசியல் ஜனநாயக உரிமையில் கோட்டா, மகிந்த அரசு கைவைப்பதினை கண்டிப்பதற்காகவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள குறித்த போராட்டத்தில் இன மத மொழி பேதம் கடந்து அனைத்து அமைப்பு க்களையும் கலந்து கொள்ளுமாறு கட்சி அழைத்து நிற்கின்றது. என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 அரசின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக அணிதிரளுங்கள்-என்.பிரதீபன்