இலங்கை நெருக்கடி: இந்தியாவில் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு தஞ்சம் அளிக்க கூடாது – அன்புமணி ராமதாஸ்

இலங்கை போர்க் குற்றவாளிகளான ராஜபக்ஷ சகோதரர்களுக்கு இந்தியா ஒரு போது தஞ்சம் அளிக்க கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா முன்னாள் மத்திய அமைச்சரும் பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ” 2009 ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்தவர்கள் ராஜபக்ஷ சகோதரர்கள் தான்.

அவர்களின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் திரட்டியுள்ளது. அப்படிப்பட்ட போர்க்குற்றவாளிகளுக்கு இந்தியா ஒருபோதும் தஞ்சம் அளிக்கக் கூடாது.

போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆதாரங்களின் அடிப்படையில் ராஜபக்ஷ சகோதரர்களை கைது செய்து, பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும், பிற உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Tamil News