Home செய்திகள் தமிழரசு தலைமைப் பதவிக்கான போட்டி தவிா்க்கப்படுமா? நாளை மூவரும் கூடி இறுதி முடிவை அறிவிப்பாா்கள்

தமிழரசு தலைமைப் பதவிக்கான போட்டி தவிா்க்கப்படுமா? நாளை மூவரும் கூடி இறுதி முடிவை அறிவிப்பாா்கள்

தமிழ்க் கட்சிகளின் இன்றைய கூட்டத்தில்இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவரை போட்டி என்று தெரிவு செய்வதற்காக மூன்று வேட்பாளர்களும் தமக்குள் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு ஒரு நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதே வேளை தமிழரசு கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதியும், தேசிய மாநாட்டை 28 ஆம் திகதியும் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் குழு இன்று புதன்கிழமை மாலை கொழும்பில் உள்ள இரா சம்பந்தனின் இல்லத்தில் கூடி இந்த தீர்மானத்தை எடுத்தது.

திருகோணமலை மாவட்டத்தில் கட்சியின் நிர்வாக தேர்வுகளில் நடந்த குளறுபடிகள் சிஎஸ் செய்யாமல் தேசிய மகாநாட்டை நடத்தக்கூடாது என சம்பந்தன் பல வலியுறுத்திய போதிலும் கூட கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் மகாநாட்டை நடத்தியே தீர வேண்டும் என்பதை வலியுறுத்தியதால் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மகாநாட்டை குறிப்பிட்ட திகதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

சட்டத்ரணி கே.வி.தவராஜா உரையாற்றியபோது, ஸ்ரீதரன் சுமந்திரன் ஆகிய இருவருமே தலைமை பதவிக்கு போட்டியிட்டு யார் வந்தாலும் இணைந்து செயல்படுவதாக கூறி இருக்கின்றார்கள். ஆனால் கீழ் மட்டத்தில் அவ்வாறான நிலைமைகள் இல்லை. இரண்டு தரப்பு ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் மோதிக் கொண்டிருக்கின்றார்கள். யார் வந்தாலும் கட்சிக்கு பாதிப்பு உள்ளது எனத் தெரிவித்தாா்.

இதனால் மூன்று வேட்பாளர்களும் தமக்குள் பேசி ஒரு இணக்கான நிலைப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவா் தெரிவித்தாா். கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் இதனை ஆதரித்தனா்.

இதனை அடுத்து தலைமைப் போட்டியில் விட்டுக்கொடுப்புகள் மேற்கொள்ளலாமா என மூன்று வேட்பாளர்களும் கலந்துரையாடி பதிலளிப்பதற்காக மூன்று வேட்பாளர்கள் தரப்பிலும் கூறப்பட்டது. இதற்காக ஒரு நாள் அவகாசத்தை அவர்கள் கேட்டுக்கொண்டனா். நாளை கொழும்பில் மூன்று பேரும் கலந்துரையாடு தமது முடிவை அறிவிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version