Tamil News
Home செய்திகள் திங்கட்கிழமை நடைபெறுகின்றது மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு

திங்கட்கிழமை நடைபெறுகின்றது மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு

ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத்,கடந்த 8ம் திகதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் திகதி நடைபெறும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்திருக்கிறது.

மறைந்த ராணி எலிசபெத்தின் உடல் தலைநகரான எடின்பர்க் கொண்டு செல்லப்பட்டது.

முதலில் எலிசபெத்தின் உடல், ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை ராணியின் உடல் அங்குள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் பார்வைக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ராணியின் இறுதிச் சடங்கு, வரும் திங்கட்கிழமை நடப்பதைத் தொடர்ந்து அதற்காக ஆயத்தப் பணிகளை அரசக் குடும்பம் தீவிரப்படுத்தியுள்ளது.

Exit mobile version