Home உலகச் செய்திகள் அமெரிக்காவின் பிரதிநிதியாக கட்டார் செயற்படும்

அமெரிக்காவின் பிரதிநிதியாக கட்டார் செயற்படும்

அமெரிக்காவின் பிரதிநிதியாக கட்டார் செயற்படும்

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்கும் அமெரிக்காவின் பிரதிநிதியாக கட்டார் செயற்படும். இந்தப் பிரதிநிதித்துவத்தை அமெரிக்கா கட்டார் அரசுக்கு வழங்கியுள்ளது.

இது தொடர்பான உடன்பாட்டில் அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் அந்தோனி பிலிங்டனும், கட்டாரின் வெளிவிவகார அமைச்சர் சேக் முகமட் பின் அப்துல்ரகுமானும் கையெழுத்துட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க தூதரகம் டோகாவில் இயங்கும் ஆனால் அதன் பிரதிநிதியாக கட்டார் தூதரகம் ஆப்கானிஸ்தானில் இயங்கும். இந்த தூதரகம் ஆப்கானில் உள்ள அமெரிக்காவின் நலன்களை பாதுகாப்பதுடன், ஆப்கான் மக்கள் அமெரிக்காவுக்கு செல்வதற்கான நுளைவு அனுமதிகள் வழங்குவதையும் மேற்கொள்ளும்.

ஆப்கானில் இருந்து அமெரிக்க படையினர் வெளியேறிய பின்னர் அமெரிக்கா அமைக்கும் முதலாவது அலுவலகம் இதுவாகும்.

பிராந்திய உறுதித்தன்மையை பேணுவதில் கட்டார் முக்கிய பங்காற்றும் எனவும் இதன் மூலம் ஆப்கானின் இடைக்கால அரசுடன் அமெரிக்கா தொடர்ந்து தொடர்புகளை பேணும் எனவும் பிளிங்டன் தெரிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டில் இருந்து தலிபான்களின் அலுவலகம் இயங்குவதற்கு கட்டார் அனுமதி வழங்கியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version