ரஷ்யா பாராளுமன்றத் தேர்தலில் புடின் கட்சி முன்னிலை

புடினின் கட்சி

ரஷ்யாவில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாதிமிர்  பெரும்பான்மை பெறும் நிலையில் இருக்கிறது.

ரஷ்யாவில்  கடந்த17 ஆம் திகதி தொடங்கிய மூன்று நாள் பாராளுமன்றத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

மேலும் அரசுக்கு எதிரான பெரும்பாலான கட்சிகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கணிப்புகள், புடினின் யுனைட்டட் ரஷ்யா கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று கூறுகின்றன.

450 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தின் கீழவையான டூமாவுக்கு தேர்தல் நடந்திருக்கிறது. இதில் 14 கட்சிகள் போட்டியிட்டுள்ளன.

50 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதில் 46 சதவிகித வாக்குகளை புடின் கட்சியும் 21 சதவிகித வாக்குகளை கம்யூனிஸ்ட் கட்சியும் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021