Home உலகச் செய்திகள் Pulitzer விருது பெற்ற இந்திய புகைப்பட செய்தியாளர் ஆஃப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக தகவல்

Pulitzer விருது பெற்ற இந்திய புகைப்பட செய்தியாளர் ஆஃப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக தகவல்

161605 tepyaunglz 1626420791 Pulitzer விருது பெற்ற இந்திய புகைப்பட செய்தியாளர் ஆஃப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக தகவல்

புலிட்சர் (Pulitzer) விருது பெற்ற இந்திய புகைப்பட  செய்தியாளர் டேனிஷ் சித்திகி ஆஃப்கானிஸ்தானில் கொல்லப் பட்டுள்ளதாக அந்நாட்டின் இந்தியா வுக்கான தூதர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்த டேனிஷ் சித்திகி மும்பையை சேர்ந்தவர். மியான்மரின் ரோஹிஞ்சா சமூகத்தினர் எதிர் கொண்ட வன்முறையை புகைப்பட ஆவணம் செய்ததற்காக அவருக்கு புலிட்சர் விருது வழங்கப் பட்டது.

சமீபத்தில் கொரோனா இரண்டாம் அலையில் இந்தியாவில் பெரும் அளவில் நிகழ்ந்த இறுதி சடங்குகளை அவர் படம் பிடித்தது பெரிய அளவில் வைரலாகி, உலக கவனத்தை ஈர்த்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில், ஆஃப்கானிஸ்தான் மோதல்களை படம் பிடிக்க சித்திகி சென்றிருந்தார். பாகிஸ்தான் எல்லை சாவடி அருகே தலிபான்கள் உடனான சண்டையில் ஈடுபட்டிருந்த ஆப்கான் படைகளுடன் அவர் இருந்ததாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

டேனிஷ் சித்திகி மரணம் தொடர்பாக இந்தியா வுக்கான ஆப்கன் தூதர் ஃபரிட் மமுன்ட்சே “தனது நண்பர் கொல்லப் பட்டது” தெரிந்து மிகுந்த வருத்தமடைந்து ள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

Exit mobile version