Home செய்திகள் தமிழினப் படுகொலை ஆவணக்கையேடு வெளியீடு

தமிழினப் படுகொலை ஆவணக்கையேடு வெளியீடு


ஜேர்மனியில்   சட்டத்துறைபயிலும் செல்வி ப.தாட்சாயினி அவர்களினால் சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழினப் படுகொலை ஆவணக்கையேடு ஒன்று சம்பவங்களை, ஆதாரங்களுடன் நான்கு மொழிகளில் நவீன வடிவமைப்பில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழினப் படுகொலை ஆவணக்கையேடு

கடந்த 23ம் திகதி ஜேர்மனியின் வரண்டோவ்  என்ற நகரில் நடந்த இந்நிகழ்வு,  மக்கள் எழுச்சியுடனும்  தமிழின உணர்வாளர்கள் , அரசியல் தலைவர்கள், ஜேர்மன் கட்சிசார், மற்றும் மனிதவுரிமைசார், பிரமுகர்களுடனும் மிகவும் சிறப்புடனும் உணர்வுடனும் தமிழர் மரபுகளுடனும் தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டு, தமிழீழ எழுச்சி கானங்களை இளையோர் வழங்க சிறப்பானமுறையில், நடைபெற்றறுள்ளது.

இவ்வாறான, தமிழினப் படுகொலையின் ஆவணங்களைப் பயன்படுத்தி அனைத்துலக ரீதியில் எமது நியாயமான உரிமைகளைச் சர்வதேசத்திடம் கோரிப் போராடுவோம் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

&

Exit mobile version