வடமாகாண முன்னாள் ஆளுநர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிப்பு

வடமாகாண முன்னாள் ஆளுநர்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகியதைத் அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வடமாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நியமிக்க நாடாளுமன்ற பேரவை அனுமதியளித்துள்ளது.

அத்துடன் வி.சிவஞானசோதியின் மறைவை அடுத்து பொதுச் சேவைகள் ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காக சுந்தரம் அருமைநாயகத்தை நியமிப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுந்தரம் அருமைநாயகம் இதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார்.

இது தொடர்பான பரிந்துரைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டிருந்தன.

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad வடமாகாண முன்னாள் ஆளுநர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிப்பு