Tamil News
Home செய்திகள் உலக வங்கியின் கடனுதவியின் கீழ் இலங்கைக்கு அம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கி வைப்பு

உலக வங்கியின் கடனுதவியின் கீழ் இலங்கைக்கு அம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கி வைப்பு

உலக வங்கியின் கடனுதவியின் கீழ் இலங்கையில்   கோவிட் -19 அவசரகால பதில் மற்றும் சுகாதார அமைப்பை மேம்படுத்தும் திட்டத்தினால் சுகாதார அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 60 புதிய அம்புலன்ஸ்கள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் அண்மையில் சுகாதார அமைப்புகளுக்கு கையளிக்கப்பட்டன.

நாட்டின் சுகாதார அமைப்பின் பௌதீக வளங்களை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்ட இந்த அம்புலன்ஸ் வண்டி ஒன்றின் பெறுமதி 24.4 மில்லியன் ரூபாவாகும், அதன்படி நன்கொடையாக வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டிகளின் மொத்த பெறுமதி 1464 மில்லியன் ரூபாவாகும்.

முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் கயாஷான் நாவானந்தா, சுகாதார செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன், பிரதி பணிப்பாளர் நாயகம் (விநியோகம்) சிசிரகுமார, பணிப்பாளர் (போக்குவரத்து) ஏ.சி.எச்.எஸ். ஜிசாந்த, உலக வங்கியின் பொது சுகாதார சேவைகள் தொடர்பான சிரேஷ்ட நிபுணர் தீபிகா ஆர்ட்டிகல மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Exit mobile version