தாக்குதல்தாரி தொடர்பான தகவல்களை வழங்குங்கள்; நியூசிலாந்திடம் இலங்கை கோரிக்கை

தாக்குதல்தாரி தகவல்களை வழங்குங்கள்தாக்குதல்தாரி தகவல்களை வழங்குங்கள்: நியூசிலாந்தின் வணிக வளாகம் ஒன்றில் ஆறு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய இலங்கையர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் அந்த நாட்டிடம் கோரியுள்ளது.

இலங்கை தூதுவரின் ஊடாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நியூஸிலாந்தில் ஆறு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய இலங்கையர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

குறித்த இலங்கையர் 10 ஆண்டுகளாக நியூஸிலாந்தில் வசித்து வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலானது, பயங்கரவாத தாக்குதலாகும் என நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

அணுவாயுதப் பரிசோதனை – தமிழர் தாயகமும் பாலைவனமாகலாம். – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

குறித்த இலங்கையர் கண்காணிப்பில் இருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்படாத குறித்த நபர், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே குறித்த நபர் பற்றிய தகவல்களைத் தருமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021