Home செய்திகள் ‘நாட்டில் என்ன போரா நடக்குது’: ஊரடங்கிற்கு மத்தியிலும் இலங்கையின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம்

‘நாட்டில் என்ன போரா நடக்குது’: ஊரடங்கிற்கு மத்தியிலும் இலங்கையின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசுக்கு எதிராக பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது.

இலங்கையின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம்

இதில் யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மட்டக்களப்பு, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் சற்றுமுன் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு.

கண்டி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே நேரம் “எதற்கு அவசர கால சட்டம்? நாட்டில் என்ன போரா நடக்குது? ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” இலங்கை அரசை கண்டித்து எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம் முன்பதாக இடம் பெரும் ஆர்ப்பாட்டம்.

இலங்கை தற்போது சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள ஜனாதிபதி கோட்டாபய ராகபக்ச தலைமையிலான அரசாங்கம் வீடு செல்லவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி கோசம் எழுப்பியிருந்தனர்.

Exit mobile version