சர்வதேச தொழிலாளர் நாளை முன்னிட்டு மட்டக்களப்பு, வவுனியா, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

பேரணியும் கவன ஈர்ப்பு போராட்டமும்

சர்வதேச தொழிலாளர் நாளை முன்னிட்டு மட்டக்களப்பில்  தொழிலாளர்களின் உரிமையினை வலியுறுத்தியும் தொழிலாளர்களை இன்றைய பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்க கோரியும் பேரணியும் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கிளையின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாட்டு வண்டியுடன் பொருள்களின் வலையேற்றத்தினை குறிக்கும் வகையிலான பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இனவாதம் இனியில்லை. சிவப்புத்துண்டுக்கு பயமில்லை,சுரண்டாதே சுரண்டாதே மீன்வளத்தினை சுரண்டாதே,விற்காதே விற்காதே வளங்களைவ விற்காதே உட்பட பல்வேறு பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

காந்திபூங்காவில் ஆரம்பமான பேரணியானது மட்டக்களப்பு மணிக்கூண்டு வரையில் சென்று அங்கிருந்து படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபிக்கு முன்பாக  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் பொதுமக்கள்,மாநகரசபை,பிரதேசசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

பேரணியும் கவன ஈர்ப்பு போராட்டமும்

அதே நேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சர்வதேச மேதின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

பேரணியும் கவன ஈர்ப்பு போராட்டமும்

இந்நிலையில்,புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் மேதின பேரணி வவுனியாவில் இடம்பெற்றது.

குறித்த பேரணியில் அரசாங்கத்திற்கு எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் உழைக்கும் வர்க்கத்திற்கு ஆதரவான கோசங்களும் எழுப்பட்டது.

பேரணியும் கவன ஈர்ப்பு போராட்டமும்

அத்துடன் வவுனியா மக்கள் திட்ட ஒன்றியம் சோசலிச மக்கள் கூட்டமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மே தின நிகழ்வு கல்மடு மக்கள் திட்ட ஒன்றியத்தில் மாகாண அலுவலகத்தின் வடமாகாண இணைப்பாளர் ந.தேவகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.

 

பேரணியும் கவன ஈர்ப்பு போராட்டமும்

அத்துடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.