Home செய்திகள் கறுப்பு யூலையை நினைவு நாளில் நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

கறுப்பு யூலையை நினைவு நாளில் நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

WhatsApp Image 2021 07 23 at 1.28.00 PM 1 கறுப்பு யூலையை நினைவு நாளில் நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் இனப் படுகொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

கறுப்பு ஜூலை23 நினைவு நாளை நினைவுகூர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் காலை 10 மணி முதல் 11 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள் என்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் இன அழிப்புக்கு நீதி வேண்டும் என்றும் காண கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே என்றும் வெளியேறு இராணுவமே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பதவிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

Exit mobile version