Home உலகச் செய்திகள் இந்தியாவிற்கு வர வேண்டும்-திருத்தந்தை பிரான்ஸிஸுக்கு  பிரதமர் மோடி அழைப்பு

இந்தியாவிற்கு வர வேண்டும்-திருத்தந்தை பிரான்ஸிஸுக்கு  பிரதமர் மோடி அழைப்பு

இந்தியாவிற்கு வர வேண்டும்

இந்தியாவிற்கு வர வேண்டும் என திருத்தந்தை  பிரான்ஸிஸுக்கு  பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி தலைநகர் ரோமில் ஜி20 அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இத்தாலியின் ரோம் நகருக்கு  பிரதமர் மோடி சென்றுள்ளார்.

இந்த பயணத்தின் போது  வாடிகன் நகரில்  திருத்தந்தை பிரான்சிஸை  பிரதமர் மோடி சந்தித்து பேசியிருந்தார்.

இந்த சந்திப்பு சிறப்பாக இருந்ததாகவும், இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்த திட்டமிடப்பட்டதாகவும் அதேசமயம் ஒரு மணி நேரம் நீண்டதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, கோவிட், அமைதி, ஸ்திரத்தன்மை, பருவநிலை மாற்றம் மற்றும் பொது விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரம் இந்தியாவிற்கு வர வேண்டும் என  திருத்தந்தை பிரான்ஸிஸுக்கு  பிரதமர் மோடி  அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version