அன்னை பூபதி அவர்களின் உண்ணாவிரதம் 19.03.1988 அன்று தொடங்கியது
Home செய்திகள் பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக மாற்ற வேண்டும்! சுமந்திரன் எம். பி. சபையில் வலியுறுத்து

பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக மாற்ற வேண்டும்! சுமந்திரன் எம். பி. சபையில் வலியுறுத்து

பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் 300- 400 பேர் தற்போதும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்து எவரும் பேசுவதில்லை. ஒருசிலரின் வழக்குகளே எப்போதும் பிரபல்யமாக பேசப்பட்டுள்ளன. எனவே, பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்க அல்லது முழுமையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்று குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்ட மூலம் மீதான இரண் டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வெளிவிவகாரத்துறை அமைச்சர் பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை முன்வைக்கும் சட்டமூலத்தை சபையில் முன்வைத்துள்ளார்.

இந்த சட்டம் 1979 ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாக ஆறு மாதங்களுக்கு நடை முறைப்படுத்துவதாக கூறியே அரசாங் கம் கொண்டுவந்ததாக பத்திரிகைகளில் வாசித்தோம். இதுவொரு தற்காலிக சட்ட மூலம் எனவும், ஆறுமாத காலத்திற்கே இது நடைமுறையில் இருக்கும் எனவும் கூறினாலும் இன்றுவரை 42 ஆண்டுகளாக இந்த சட்டத்துடன் வாழ வேண்டியேற்பட்டது.

சர்வதேச சமூகத்தின் வலியுறுத்தல் களுக்கு அமையவும், புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என வலி யுறுத்தியதற்கு அமையவுமே இப்போது வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் திருத்த சட்டமூலத்தை முன்வைத்துள்ளார். இதற்கு மறுசீரமைப்பு என பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் அமைச்சரை நான் யாழ்ப்பாணத்தில் சந்தித்த வேளையிலும், மறுசீரமைப்பு என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தம் தேடவேண்டியுள்ளது என் பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

அதனை அவர் மறுக்கவும் இல்லை. இந்த திருத்த சட்டத்தில் புதிதாக எது வுமே மறுசீரமைக்கப்படவில்லை. இங்கு திருத்தங்கள் எனக் கூறப்பட்டுள்ள சகல விடயங்களும் ஏற்கனவே அவ்வாறே உள் ளன . 18 மாதங்களாக தடுத்து வைக்கப் பட முடியுமென்பதனை 12 மாதங்களாக குறைக்க நடவடிக்கை எடுத்ததாக கூறுகின் றனர், எமக்கு தெரிய 18 ஆண்டுகளுக்கு மேலாக சிலர் பயங்கரவாத தடை சட்டத் தின் கீழ் இன்றும் தடுத்து வைக்கப்பட் டுள்ளனர். ஒரு சிலரை பிணையில் விடுவிக்க நட வடிக்கை எடுத்துள்ளீர்கள், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பிணையில் விடுவிக் கப்பட்டுள்ளார். அவர் பிணையில் விடு விக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின் றது. கவிஞர் அஹ்னாபும் விடுவிக்கப்பட் டுள்ளார்.

ஆனால், இந்த விடுதலைகளும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய அமைப்புகள் மூலமாக பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு இவர்களின் பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்ட தன் காரணமாகவே இடம்பெற்றுள்ளன. ஆனால், மேலும் பலர் இவ்வாறு உள்ளனர், இருபது, இருபத்தைந்து, முப்பது ஆண்டு களாக உள்ளனர். குறைந்தபட்சம் 300-400 பேர் இன்றைய நிலையிலும் பயங்கர வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக் கப்பட்டுள்ளனர் . அவர்கள் குறித்து எவ ரும் பேசுவதில்லை. ஒரு சிலரின் வழக்குகளே எப்போதும் பிரபல்யமாக பேசப்பட்டுள்ளன.

எனவே பயங்கரவாத தடைச் சட் டத்தை முழுமையாக நீக்க அல்லது முழு மையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை என்றார்.

Exit mobile version