Home செய்திகள் பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக திருத்தவேண்டும்! வலியறுத்துகிறது ஐரோப்பிய ஒன்றியம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக திருத்தவேண்டும்! வலியறுத்துகிறது ஐரோப்பிய ஒன்றியம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை
நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முழுமையாக திருத்துவதற்கு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் சில திருத்தங் கள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் அதில் முக்கியமான கூறுகள் உள்ளடக்கப்படவில்லை என ஐரோப்பிய ஒன்றி யம் சுட்டிக்காட்டியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பயன்பாட்டைத் தொடர்ந்து குறைக்கு மாறும் வலியுறுத்திய ஐரோப்பிய ஒன்றியம், எந்தவித குற் றச்சாட்டும் இன்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களை பிணையில் விடுவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 24ஆவது கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிரஸ்ஸல்ஸில் நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் நல்லிணக்கம், மனித உரிமைகள், வர்த்தகம், ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

குறிப்பாக காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் பொறிமுறைகளுடன் ஒத்துழைப்பையும் ஈடுபாட்டையும் தொடருமாறு இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவித்தது.

ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் சிவில் சமூகத்தை வலுப்படுத்துவது மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் பன்முகத்தன்மையுடன் செயற்படத் தேவையான இடத்தை வழங்குவதன் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டன.

நீதிப் பொறிமுறை மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்கத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியது. ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் இரு தரப்பு வர்த்தக உறவுகளின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டன.

இதேவேளை, பல ஐரோப்பிய தயாரிப்புகள் தனது சந்தைக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் இலங்கை விதித்துள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக வலியுறுத்தியது.

தொற்றுநோயின் தாக்கத்தின் விளைவாக ஏற்பட்ட அந்நிய செலாவணி பற்றாக் குறையைச் சமாளிக்கும் வகையில் இடைக்கால நடவடிக்கையாகவே அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு தற்காலிகஇறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக இலங்கை தெளிவுபடுத்தியது.

இந்த நடவடிக்கை மீளாய்வுக்கு உட்பட்டது எனவும் இலங்கை கூறியது. இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மூலம் கிடைத்த பங்களிப்பை இலங்கைபாராட்டியது.

2021 செப்ரெம்பரில் ஜி.எஸ்.பி. வரிச் சலுகை தொடர்பான கண்காணிப்புப் பணியின்போது இலங்கை ஆக்கபூர்வமான ஈடுபாட்டை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டது.

Exit mobile version