Home செய்திகள் பயங்கரவாத தடைச் சட்டம் – தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகனின் வழக்கு ஒத்திவைப்பு

பயங்கரவாத தடைச் சட்டம் – தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகனின் வழக்கு ஒத்திவைப்பு

WhatsApp Image 2022 05 04 at 02.55.07 பயங்கரவாத தடைச் சட்டம் - தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகனின் வழக்கு ஒத்திவைப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனின் வழக்கு எதிர்வரும் 11ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 02.05.2021 ஏறாவூர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 05.05.2021 அன்று கைது செய்யப்பட்ட தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனின் வழக்கு எதிர்வரும் 11ம் திகத்திக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி ளு.அன்வர் சஜாக் முன்னிலையில் வழக்கு  இன்று எடுத்து கொள்ளப்பட்ட வேளை நீதவான் இந்த  உத்தரவை பிறப்பித்தார்.

ஒரு வருடத்தின் பின் இவர் இன்று நீதி மன்றிற்கு அழைத்து வரப்பட்ட அதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பயங்கரவாத தடைச்சட்த்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கட்டிருந்த நிலையில் இவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version