Tamil News
Home செய்திகள் அதானியுடனான உடன்பாட்டை நிறுத்துமாறு பங்களாதேசத்திற்கு அழுத்தம்

அதானியுடனான உடன்பாட்டை நிறுத்துமாறு பங்களாதேசத்திற்கு அழுத்தம்

இந்தியாவில் இருந்து பங்களாதேசத்திற்கு அதானி குழுமத்தின் எரிசக்தி நிறுவனம் ஏற்றுமதி செய்யும் மின்சாரம் தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

1600 மெகாவற் மின்சாரம் எதிர்வரும் மாதம் முதல் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட இருந்த நிலையில், அது தொடர்பில் எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளதுடன், உடன்பாட்டை நிறுத்துமாறும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்தியாவில் ஜர்கன்ட் பகுதியில் உள்ள 1.7 பில்லியன் டொலர்கள் பெறுமதியான கொட்டா எனப்படும் அதானியின் தனியார் எரிசக்தி நிலையத்தில் இருந்தே இந்த மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. அதற்கான நிலக்கரி அவுஸ்திரேலியாவில் உள்ள அதானியின் நிலக்கரி சுரங்கத்தில் அகழப்பட்டு, இந்தியாவில் உள்ள அதானியின் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு மின்சரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

ஆனால் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விட இறக்குமதி செய்யப்படும் மின்சாரத்தின் விலை அதிகம் எனவும், பங்களாதேசத்தின் வரிகளற்ற பகுதியில் அதானியின் நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதானி குழுமம் அங்கு வரிகள் செலுத்த தேவையில்லை எனவே பங்களாதேசத்திற்கு வரிகள் மூலமும் நிதி கிடைக்காது எனவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

அதேசயம் இந்திய மக்கள் மற்றும் சுற்றுசூழலின் பாதுகாப்பு தொடர்பில் கருத்தில் கொள்ளாமல் அதானி குழுமம் வியாபாரத்தில் ஈடுபட இந்திய அரசு அனுமதித்துள்ளது இந்தியாவிலும் எதிர்ப்புக்களை தோற்றுவித்துள்ளது.

பங்களாதேசத்தின் பொருளாதாரம் வளர்ந்து வருகின்றது. அதற்கு 2030 ஆம் ஆண்டு 34000 மெகாவற் மின்சக்தி தேவை. ஆனால் அதானி குழுமத்தின் மின்சக்தி மிகவும் விலை கூடியது என அமெரிக்காவை தளமாகக் கொண்ட எரிசக்தி பொருளாதார நிதி ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Exit mobile version