இலங்கை ஜனாதிபதி பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களை காப்பாற்றி வருகின்றார்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

இலங்கை ஜனாதிபதி பாரிய குற்றங்களில்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த காலங்களில் மனித உரிமை விவகாரங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களிற்கு பின்னடைவை ஏற்படுத்தி வருவதோடு, இலங்கை ஜனாதிபதி பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களை காப்பாற்றியும் வருகின்றார் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

மனிதஉரிமை கண்காணிப்பகம் தனது வருடாந்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

மேலும் 2021 இல் இலங்கை அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தினரை ஒடுக்குமுறைக் குள்ளாக்கியது, செயற்பாட்டாளர்களை துன்புறுத்தியது-ஜனநாயக அமைப்புகளை அலட்சியம் செய்தது- யுத்தக்குற்றங்கள் உட்படபாரிய குற்றங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்கான நடவடிக்கைகளை தடுத்தது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்  குற்றம் சுமத்தியுள்ளது.

Tamil News