‘இலங்கையின் மிகமோசமான குற்றவாளியாக ஐனாதிபதியே அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்’-கஜேந்திரகுமார்

 

இலங்கையின் மிகமோசமான குற்றவாளியாக ஐனாதிபதி


இலங்கையின் மிகமோசமான குற்றவாளியாக ஐனாதிபதியே அடையாளப் படுத்தப்பட்டுள்ளார்  என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

இன்று  இடம்பெற்ற  இணையவழியிலான ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இன்றைய அவல நிலையில்  தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற பெயரில் பெரும்பாலான  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தம்மை அடையாளப்படுத்தி மோசமான குற்றவாளியை விசாரிக்கும்படி அனுமதி அளித்துள்ளனர்.

ஐனாதிபதி கோட்டாபயாவின் கருத்துக்கள்  ஒன்றும் புதிதல்ல. அண்மையில் அவர்,  காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில்  காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் குடும்பங்களுக்கு ஒரு தெளிவான செய்தியை சொன்னார். அதாவது காணாமலாக்கப் பட்டவர்கள் எப்படி காணாமலாக்கப்பட்டனர் என்ன நடந்தது அதற்கு யார் குற்றவாளி யார் பொறுப்பு என்ற விடயம் அனைத்தையும் தேடுவதைக் கைவிடும்படி ஜனாதிபதி கூறி உள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த நாட்டின்  ஐனாதிபதி மிகப் பெரும் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் நபர். அவர் தானாகவே கூறியுள்ளார் . பொறுப்புக்கூறல் விடயத்தை மறக்க வேண்டும் என்று. பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றி தொடர்ந்தும் அவர்களின் அவலங்களை தொடர வைக்கும் அளவுக்கு  மோசமான செயல் இது.

கோட்டாபயாவுக்கு முன் இருந்த அரசுகளும் காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தனர். காணாமலாக்கப்பட்ட அனைவரும் இறந்து விட்டனர். எனக் கூறி உண்மைகளைக் கண்டறியும் செயலிலிருந்து அனைவரும் விடுபடவேண்டும் என்றனர்.  தமிழ் மக்கள் மீதான பொறுப்புக்கூறலுக்கு எதிரான மிக மோசமான அல நிலைக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும்பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளனர்” என்றார்.

(யாழ்.தர்மினி)

ilakku-Weekly-Epaper-146-September-05-2021