Home செய்திகள் அண்ணன் பிரபாகரன் அவர்களின் அக்கறை

அண்ணன் பிரபாகரன் அவர்களின் அக்கறை

தமிழீழத்தில் என்னுடைய “புயலின் நிறங்கள்” ஓவியக்காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த 2005 ஜூன் மாதத்தில் இடையில் ஒருநாள் கிளிநொச்சி அழகியல் கலாமன்றத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பள்ளி ஓவிய ஆசிரியர்களுக்கான பயிலரங்கு ஒன்றை ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் படி நடத்திக் கொண்டிருந்தேன்.

மாலைப் பொழுதில் வழக்கமாக சந்திக்கும் அண்ணன் சுப.தமிழ்ச்செல்வன் அவர்கள்இ “நாளை காலை எந்த உணவும் சாப்பிடாமல் இருங்கள் அண்ணா, மருத்துவரிடம் சென்று ஒருமுறை சர்க்கரை அளவை பரிசோதித்து பார்த்துவிடலாம்” என்றார். ‘இல்லை அண்ணா அதற்கு அவசியம் இல்லைஇ எனக்கு எல்லாமே நார்மலாக இருக்கிறது. அப்படி ஏதாவது உடலில் மாற்றம் தெரிந்தால் எனக்குத் தெரிந்துவிடும்’ என்றேன்.

“இல்லை அண்ணா நீங்கள் தயாராக இருங்கள். ஒருமுறை அவசியம் இரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதனை செய்துவிடுவோம் என்று கூறிவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல் எனக்கு எப்பொழும் ஓட்டுனராக இருந்த போராளி அமலனிடம்இ நீ நாளை காலை அண்ணனை அழைத்துக் கொண்டு வந்துவிடு “அவர்களுக்கு” நான் அறிவித்துவிடுகிறேன்” என்றார். அதற்குமேல் எனக்கு ஒன்றும் சொல்லமுடியவில்லை. ஆமோதித்தேன்.

காலை ஏழு மணியளவில் அமலன் வழக்கமான பஜுரோ வாகனத்தில் நான் தங்கியிருந்த டாங்க் வியூ ஓட்டலுக்கு வந்தார். நேராக கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அது இயக்கம் நடத்திய உயர்தர சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை. நிறைய மக்கள் சிகிச்சைப் பெறுவதற்காக காத்திருந்தனர்.117594486 3344998882228142 4619083789915492825 n அண்ணன் பிரபாகரன் அவர்களின் அக்கறை

மிகவும் ஒழுங்கோடும் சுத்தமாகவும் சுகாதாரத்தோடும் பராமரிக்கப்பட்டுஇ ஒரு உயர்தர மருத்துவமனைக்குரிய அத்தனை அம்சங்களோடும் உள்ளதைக் கண்டு வியந்தேன். அங்கு மருத்துவப் பிரிவு பொறுப்பாளர் எனக்காகக் காத்திருந்து வரவேற்று மருத்துவரிடம் அழைத்துச் சென்று என்னை அறிமுகப்படுத்தினார். மருத்துவருக்கு என்னை நன்றாகத் தெரிந்திருந்தது. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்ட பிறகு, “உடலுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?” என்று என்னை மருத்துவர் கேட்டார்.

‘எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நன்றாக இருக்கிறேன். சொன்னதைக் கேட்காமல் பிடிவாதமாக அழைத்து வருகிறார்கள்இ கடந்த பத்தாண்டுகளாக சர்க்கரைக் குறைபாடு இருக்கிறது. அதனால் சர்க்கரை அளவு கூடியிருந்தால் என் உடலில் ஏற்படும் மாற்றத்தை என்னால் கண்டுபிடிக்க முடியும். அப்படி ஏதும் இல்லை’ என்றேன்.

“பரவாயில்லை முழுமையாக இரத்த பரிசோதனை செய்துப் பார்த்து விடுவோம்” என்று உதவிமருத்துவரை அழைத்து ஆய்வுக் கூடத்திற்கு அழைத்துச் சென்று இரத்த மாதிரியை எடுக்கவும்இ என்னென்ன ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதையும் எழுதிக் கொடுத்து செய்ய அறிவுறுத்தினார். இரத்த மாதிரியை பெற்றவுடன், “நீங்கள் இங்கு காத்திருக்க வேண்டாம். நீங்கள் சென்று உங்கள் வேலையைக் கவனியுங்கள்இ பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் அறிவிக்கச் சொல்கிறேன் அப்போது வந்தால் போதும்” என்று எனக்கு விடைகொடுத்தார்.

காலை உணவை முடித்துவிட்டுஇ ஆசிரியர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன். பத்து மணியிருக்கும் அமலன் வந்து அழைப்பதாக அழகியல் கலாமன்றப் பொறுப்பாளர் விஜயசேகரன் தகவல் சொன்னார். சென்றேன். “உங்களை அழைத்து வரச் சொல்லி வாக்கியில் தகவல் சொன்னார்கள்” என்றார். இருவரும் மருத்துவமனை சென்றோம்.

இப்போதும் மருத்துவத்துறைப் பொறுப்பாளர் காத்திருந்து மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். “எல்லாமே மிகக் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்போது என்ன மாத்திரைகளை சாப்பிடுகிறீர்களோ அதையேத் தொடருங்கள்” என்றார். இதைத் தான் நான் சொன்னேன் அண்ணன் தமிழ்ச் செல்வன் கேட்கவில்லை என்றேன். மருத்துவர் சிரித்துக் கொண்டே எனக்கு விடைகொடுத்தார்.

மாலையில்இ அன்றைய என் பணி முடித்து புறப்படும் தருவாயில் தமிழ்ச் செல்வன் அண்ணன் உங்களை அழைத்துவரச் சொன்னார் என்றார் போராளி அமலன். தமிழ்ச் செல்வன் சமாதானச் செயலகத்தில் இருந்தார்.

என்னைக் கண்டவுடன் எழுந்து நின்று “எல்லாம் கட்டுப் பாட்டில் இருப்பதாக தகவல் தந்தார்கள்… மகிழ்ச்சி அண்ணா” என்றார் தமிழ்செல்வன். ‘நான்தான் உங்களிடம் நேற்றே சொன்னேன் நீங்கள் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லையே’ என்றேன்.
சிரித்துக்கொண்டே ….”அண்ணா இது தலைவர் கட்டளை …நான் என்ன செய்ய முடியும்…” என்றார் தமிழ்ச் செல்வன்.

“நீங்கள் வாகனத்தில் சென்றபோது தலைவர் உங்களை கவனித்திருக்கிறார். உடனே என்னை அழைத்து ‘பத்து நாட்களுக்கு முன்பு பார்த்த போது இருந்ததைவிட புகழ் உடல் மெலிந்திருக்கிறது போல் தெரிகிறது. சர்க்கரை உள்ளவர். சர்க்கரை அளவு கூடியிருந்தாலும் உடல் மெலிந்துவிடும்.

உடனே நீ புகழை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்து எனக்குத் தகவல் தா …’ என்று தலைவர் கட்டளை. அதை மீற முடியாதல்லவா அண்ணா” என்றார் தமிழ்ச்செல்வன்.

அதைக் கேட்டதும் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். என்ன ஒரு அக்கறை… அன்பு… ஈடுபாடு…

ஒவ்வொரு போராளியும் அவர்களின் நலன் மீது தலைவர் அண்ணன் பிரபாகரன் எவ்வளவு அக்கறை செலுத்துகிறார் என்பதைக் கூறக் கேட்டிருக்கிறேன்இ குறிப்பாக பெண் போராளிகள் அதிகம் கூறுவார்கள். அப்போதே நான் வியந்திருக்கிறேன்.
அதுவே என் விடயத்தில் நடக்கும் போது …. மிகவும் நெகிழ்ந்துபோய் பேச்சற்று அமர்ந்திருந்தேன்….

அண்ணன் பிரபாகரன் எப்படிப்பட்ட ஒரு தலைவன்….
இப்போது நினைக்க என் நெஞ்சு விம்முகிறது..

  • ஓவியர் புகழேந்தி
Exit mobile version