வன்னியில் வாக்கு கொழும்பில் சொத்து -பிரபா கணேசன்

வன்னியில் பாராளுமன்ற உறுப்பினர்களை அதிகநாள் கொழும்பிலேதான் இருக்கின்றனர். மோசடிகளை செய்து சொத்துக்களை கொழும்பில் வாங்கி வைத்துள்ளார்கள் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட தலைமை வேட்பாளருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

நான் கொழும்பிலிருந்து வந்தவன் என்ற குற்றச்சாட்டை வைக்கின்றனர். கடந்த மூன்றரை ஆண்டுகளாக நான் வன்னியில் இருக்கிறேன், வன்னியில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களை கணக்கிட்டுபார்த்தால் அவர்கள் கொழும்பில் தான் அதிகம் இருந்துள்ளனர்

நல்லாட்சி காலத்தில் பல விடயங்களை மக்களுக்கு செய்யக் கூடியதாக இருந்தும் கூட எதனையும் செய்யாமல் ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய தேசிய கட்சியையும் காப்பாற்றுவதில் மட்டும் தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு மும்முரமாக ஈடுபட்டிருந்தது.

பிரபா கணேசனுக்கு இருக்கும் மக்கள்  செல்வாக்கை சகித்துக் கொள்ள முடியமால் அனைத்து கட்சியினரும் எனக்கு எதிராக தேவையில்லாத பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் பிரபா கணேசன் தெரிவி த்துள்ளார்.

வன்னி மாவட்ட மக்களின் வாக்குகளை பெற்றுவிட்டு அவர்கள் ஊடாக பாராளுமன்றத்தில் பாரியளவில் மோசடிகளை செய்து சொத்துக்களை கொழும்பில் வாங்கி வைத்துள்ளார்கள். இன்று என்னைப் பார்த்து பிரதேச வாதம் பேசுகின்றனர். ஆயுதப் போரட்டத்தின் போது நாடு முழுவதுமுள்ள தமிழர்கள் போரா ட்டத்தில் பங்கெடுத்தனர். மாவீரர் துயிலும் இல்லங்களை பார்த்தால் தெரியும்.

நான் ஒரு தமிழன் என்ற முறையில் தேர்தல் களத்தில் களம் இறங்கியுள்ளேன் என்று சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று இந்த அரசு 1 3ஆவது 19 ஆவது திருத்த சட்டத்தையும் ஒழித்துவிடுவார்கள். எங்களுக்கு மீண்டும் ஆணையை தாருங்கள் என்று கூட்டமைப்பு கேட்கின்றார்கள்.

13 ஆவது திருத்தச் சட்டம் ஒரு போதும் ஒழிக்கப்படமாட்டாதென பிரதமர் தெளிவாக கூறியுள்ளார் என்றும் பிரபா கணேசன் தெரிவித்தார்.