மின்சாரம் தடை- நாசகார வேலையாக இருக்கலாம்- மின்சார சபை பொது முகாமையாளர்

மின்சாரத் தடை நாசகார வேலையாக இருக்கலாம்

இலங்கையில் நேற்று இடம்பெற்ற மின்தடையால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

கடந்த சில வாரங்களாகவே எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், பிரதான எரிவாயு நிறுவனமான லிட்ரோ நிறுவனம் தனது விநியோகத்தை இடைநிறுத்தியதையடுத்து லாஃப் நிறுவனம் வழமை போன்று தமது விநியோகத்தை முன்னெடுத்து வருகின்றது. இருந்தும் நேற்றும் பல எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சார விநியோக தடை காரணமாக, நாட்டின் பல்வேறு கட்டமைப்புக்களுக்கு நேரடி தாக்கம் ஏற்பட்டிருந்தது. இவ்வாறு 6 மணி நேரம் தடைப்பட்ட மின்சாரம், நேற்று மாலை 6 மணி அளவிலேயே வழமைக்கு திரும்பியதாக இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தது.

மேலும் மின்சார பிரதான கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறே, மின் விநியோக தடைக்கான காரணம் என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தது. மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் கடந்த சில தினங்களாக நேரத்திற்கு வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,இந்த மின்தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள மின்சார சபை பொது முகாமையாளர்,  மின்சாரத் தடை நாசகார வேலையாக இருக்கலாம்.மின்சார பொறியியலாளர்கள் வேண்டுமென்றே திருத்த வேலைகளில் தாமதத்தை ஏற்படுத்துகின்றனர் என்றார்.

அத்துடன் வேண்டுமென்றே மின்சாரத் தடையை ஏற்படுத்தியவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சமல் ராஜபக்சாவும் தெரிவித்துள்ளார்.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad மின்சாரம் தடை- நாசகார வேலையாக இருக்கலாம்- மின்சார சபை பொது முகாமையாளர்