இலங்கையில் பொருளாதார நெருக்கடி: இறுதித் தவணைப் பரீட்சைகள் ஒத்திவைப்பு

இறுதித் தவணைப் பரீட்சைகள் ஒத்திவைப்பு

இறுதித் தவணைப் பரீட்சைகள் ஒத்திவைப்பு

பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு  தேவையான கடதாசிகள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் இறுதித் தவணைப் பரீட்சைகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டொலர் தட்டுப்பாடு நீடித்துவரும் நிலையில் இலங்கையில் காகிதாதிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் விலைகளும் அதிகரித்துள்ளது. இதனால் பரீட்சை வினாத்தாள்களை அச்சிடமுடியாத நிலையேற்பட்டுள்ளது.

இந்நிலையில், மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் இறுதித் தவணைப் பரீட்சைகளும் பிற்போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.

பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிப்பதற்கான கடதாசி மற்றும் மூலப்பொருட்களின் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இதற்கு காரணமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கடதாசி மற்றும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக, 6, 7, 8ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை கால அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டு,  9, 10, 11ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை பரீட்சைத் திகதிகளுக்கு மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.