Home செய்திகள் கொரோனாவால் ஒரு வருடத்துக்கு கருத்தரிப்பதை ஒத்திவையுங்கள்; விசேட மருத்துவ நிபுணர் கோரிக்கை

கொரோனாவால் ஒரு வருடத்துக்கு கருத்தரிப்பதை ஒத்திவையுங்கள்; விசேட மருத்துவ நிபுணர் கோரிக்கை

ஒரு வருடத்துக்கு கருத்தரிப்பதை ஒத்திவையுங்கள்இலங்கையில் கொரோனா வைரஸ் திரிபுக்களின் அச்சுறுத்தலால்  ஒரு வருடத்துக்கு கருத்தரிப்பதை ஒத்திவையுங்கள். பெண்கள் கருத்தரிப்பதை ஒத்திவைப்பது நல்லது என்று விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ அத்தபத்து தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதேஅவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மாறுபாடடைந்து முன்னரை விடவும் வீரியமிக்கதாக பரவல் அடைந்து வருகின்றது.

கொரோனா வைரஸ் தொடர்பில் ஆய்வுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை முழுமையாக அறிந்துகொள்ள இன்னும் காலம் ஆகலாம்.

இந்தப் புதிய வைரஸ்கள் கர்ப்பிணிப் பெண்களை அதிகம் பாதிப்பதோடு கருவில் உள்ள குழந்தையையும் ஆபத்துக்கு உள்ளாக்குகின்றது.

எனவே, தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, திருமணமான குழந்தைகளை எதிர்பார்த்திருப்போர், கர்ப்பம் தரிப்பதை இன்னும் ஒரு வருடத்துக்குத் தாமதப்படுத்தினால் நல்லதாகவே கருதுகின்றோம்.

இதனால் இந்தக் காலப்பகுதியில் பொறுத்தமான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றுவது சிறந்தது” – என்றார்.

Exit mobile version