Tamil News
Home செய்திகள் இந்தியா-பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு

இந்தியா-பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவருமான இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராகவுள்ளார். குடியரசு தலைவரின் அதிகாரத்துக்கு உட்பட்டு நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள் வரிசையில் இவரது நியமனம் வருகிறது.

இளையராஜா மட்டுமின்றி விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, பிரபல தெலுங்குப்பட கதையாசிரியரும் இயக்குநருமான விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெகடே ஆகியோரும் நியமன உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர்.

இவர்களுக்கான நியமன உத்தரவு விரைவில் குடியரசு தலைவரால் பிறப்பிக்கப்படும்.

இதற்கிடையே, புதிய நியமன உறுப்பினர்களாகவிருக்கும் நால்வருக்கும் பிரதமர் நரேந்திர மோதி தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version