Tamil News
Home செய்திகள் வடக்கு மக்களின் துன்பத்துக்கு அரசியல்வாதிகளே காரணம் – இராமலிங்கம் சந்திரசேகர்

வடக்கு மக்களின் துன்பத்துக்கு அரசியல்வாதிகளே காரணம் – இராமலிங்கம் சந்திரசேகர்

வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் மக்களின் வாழ்கையை மேம்படுத்துவது தொடர்பிலோ போதைப்பொருள் பயன்பாடுகளை நிறுத்துவதற்கோ விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதன் விளைவே மக்கள் துன்பங்களை சந்தித்து வருகிறார்கள்’ என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

வட்டுக்கோட்டை சுழிபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘கல்விக்கு சிறந்த பெயர் பெற்ற இடமான யாழ்ப்பாணத்தில் தற்போது துர்நடத்தைகள் அதிகரித்து வருவதற்கு காரணம் என்ன?’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘ஜனாதிபதித் தேர்தலுக்காக நாம் வீடு வீடாகச் சென்றபோது இங்கு இடம்பெற்று வருகின்ற கசிப்பு உற்பத்தியை நிறுத்த வேண்டும். போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இவற்றை நிறுத்த வேண்டும் என்றே மக்கள் கோரினார்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘வாள் வெட்டு அச்சறுத்தல்கள் இடம்பெற்று வருகிறது’.  ‘இங்குள்ள ஒரு சில பொலிஸ்காரர்களின் அட்டுழியங்கள் அதிகரித்துள்ளன’. ‘போதைவஸ்துக் காரர்களுடன் பொலிசார் தொடர்பில் இருக்கின்றார்கள்’
‘இவைகளுக்கு கூடிய விரைவில் முடிவுகளை எடுத்து எங்களுடைய சமூகத்தை மீட்டு எடுக்க வேண்டும்’.
‘யாழ்ப்பாணம் ஏன் இந்தப் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளது என்பதை நாம் தேடிப் பார்க்க வேண்டும்’

‘இங்குள்ள குடும்பங்கள் சமூக ரீதியாகவும் இன ரீதியாகவும் மத ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன’. இவை எல்லாவற்றக்கும் அரசியல் வாதிகளும் காரணமாகின்றர்கள் எந்தவொரு அரசியல்வாதியும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version