மத்திய வங்கி ஆளுநராக அரசியல்வாதியை நியமிப்பதா? கேள்வி எழுப்புகின்றது ஐக்கிய மக்கள் சக்தி

மத்திய வங்கி ஆளுநராக அரசியல்வாதிமத்திய வங்கி ஆளுநராக அரசியல்வாதி ஒருவரை நியமிப்பதென்பது அந்தக் கட்டமைப்பின் சுயாதீனத் தன்மையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

மத்திய வங்கியானது அரசிடமிருந்து பிரிந்து சுயாதீனமாக செயற்படவேண்டும் என்பதே அதன் கொள்கைகளில் முதன்மையானதாகும். ஆனால் இப்போது மத்தியவங்கி அரச திணைக்களம் ஒன்றைப்போல மாறியிருக்கின்றது என்று பலரும் விமர்சிக்கின்றார்கள்.

அவ்வாறிருக்கையில் அரசியல்வாதியொருவரை, அதிலும் அமைச்சுப்பதவி வகித்த ஒருவரை உடனடியாகவே மத்திய வங்கியின் ஆளுநராக நியமிப்பதென்பது அந்தக் கட்டமைப்பின் சுயாதீனத்தன்மையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்-என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பொறுப்பிலிருந்து பேராசிரியர் டபிள்யு.டி.லக்‌ஷ்மன் விலகவுள்ள நிலையில், அப்பதவிக்கு தற்போதைய இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட விருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.