Home செய்திகள் தமிழ் மக்களுடைய அரசியல்  போராட்டம் மௌனிக்கப்பட்டவில்லை, தொடர்ந்து போராடுவோம் – சாணக்கியன்

தமிழ் மக்களுடைய அரசியல்  போராட்டம் மௌனிக்கப்பட்டவில்லை, தொடர்ந்து போராடுவோம் – சாணக்கியன்

அரசியல் போராட்டம் மௌனிக்கப்பட்டவில்லை


“இன்று எமது சமூகத்தை பொறுத்தவரையிலே அரசியல் ரீதியாக ஒரு விழிப்புணர்வு இருக்க வேண்டும். ஏனென்றால் இனிமேல் எதிர்காலம் என்பது வெறுமனே பாதைகள் புனரமைப்பு மற்றும் ஆலயங்களை புனரமைப்பதோ அல்ல. இந்த நாட்டிலேயே தமிழர்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை அமைய வேண்டும். தமிழ் மக்களுடைய அரசியல்  போராட்டம் மௌனிக்கப்பட்டவில்லை, தொடர்ந்து போராடுவோம்” என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

விஷேடமாக மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் எங்களுடைய விடுதலைப் போராட்டத்தோடு தொடர்புள்ளவர்கள் அதிகளவானோர் காணப்படுகின்றனர். அதிகளவான மாவீரர்கள் காணப்படுகின்றார்கள். அவர்கள் அவர்களுடைய உயிரை அர்ப்பணித்து இந்த ஆலய புனரமைப்புக்கோ வீதி புனரமைப்புக்கோ அல்ல. தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்ததற்கான காரணம் எங்களுடைய இனத்தின் விடுதலைக்காக. அது எங்களுடைய ஒருபோராட்டத்தின் ஒரு வடிவமாக இருந்தது ஆயுதப்போராட்டம்.

2009ஆம் ஆண்டிற்கு பிற்பாடு எமது போராட்டத்தை அரசியல் ரீதியாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அப்படியான அரசியல் உரிமைகளைப் பற்றி பேசுபவர்கள் இன்று அரசாங்கம் தொடர்ந்து அச்சுறுத்தி கொண்டிருக்கின்றது.

இன்று வரைக்கும் எமது மாவட்டத்தில் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ். இவர்கள் செய்த தவறு என்ன முகநூலில் விடுதலைப்புலிகள் தொடர்பான பதிவுகளை செய்தது என்கின்ற காரணத்திற்காக அவர்களை சிறையில் வைத்து இருக்கின்றார்கள்.

வரும் காலங்களில் விடுதலை போராட்டம் மௌனிக்கப்பட்டது என்பதற்காக எங்களுடைய தமிழ் மக்களுடைய அரசியல் ரீதியான போராட்டம் மௌனிக்கப்பட்டவில்லை. எங்களுடைய அரசியல் உரிமைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டும்” என்றார்.

Exit mobile version