தமிழர் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு அவசியம்! இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

தமிழர் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு

தமிழ் மக்களிடத்தில் நீண்ட காலமாக இருக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வே அவசியம் என்று மீள வலியுறுத்தி சென்றுள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்.

மூன்று நாள் பயணமாக இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சு.ஜெய்சங்கர் நேற்று நாடு திரும்பினார். இதற்கு முன்னர் இலங்கையிலுள்ள இந்திய செய்தி யாளர்களை சந்தித்து உரையாடினார்.

இதன்போதே அவர் மேற் கண்டவாறு கூறினார். மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப் புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின்போது, வடக்கு, கிழக்கில் காணிகள் அபகரிப்பு, காணாமல் ஆக்கப் பட்டவர்கள் விவகாரம், அரசியல் கைதி கள் விவகாரம் மற்றும் அபிவிருத்தி என நான்கு விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. இவை தமிழ் மக்களிடத்தே நீண்டகால மாக இருக்கும் பிரச்னைகளாகும்.

இந்த விடயங்களுக்கு தீர்வு காண முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் நல்லிணக்கம் மற்றம் நம்பிக்கையை கட்டியெழுப்பு வதற்கு வழிவகுக்கும்.

ஆனால், இந்த விடயங்கள் முடிவாக அமை யாது அரசியல் தீர்வே முக்கிய மானது என்றும் அவர் கூறினார். அத்துடன், “இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டு வர, உரிய காலத்திற்குள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது காணப்படும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை மந்தகதியிலேயே செயல் படுகிறது என்றும் அவர் குற்றஞ் சாட்டினார்.

அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக அண்மையில் பெற்றுக்கொடுக்கப்பட்ட100 கோடி டொலர் இந்திய கடன் வசதியை உடனடியாக செயல்படுத்தும் என்று உறுதியளித்தார். திருகோணமலை எண்ணெய் தாங்கி களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள் நாட்டு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே முன்னெடுக்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலா நிதி எஸ். ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார

Tamil News