தமிழ் இனம் தனது அரசியல் முதிர்ச்சியை காண்பிக்குமா?-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறிலங்காவில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் தென்னிலங்கையில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துவருகின்றது. வழமைபோல இனவாதத்தை முன்வைப்பதன் மூலம் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதன் மூலம் 19 ஆவது திருத்தசட்டத்தை அகற்றி தனது அரச தலைவர் பதவிக்கு மேலும் அதிகாரங்களை கொண்டுவரப் போராடுகின்றது கோத்தபாயா அரசு.

எனவே தான் கிழக்கு மாகாணத்தில் அவசர அவசரமாக தொல்பொருள் ஆய்வுக்கான அரச தலைவர் செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், அது கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் தொன்மையான இடங்களையெல்லாம் பௌத்தத்திற்குரியது என பொய்கூறி தனது இனஅழிப்பை முன்னெடுத்து வருகின்றது. அதிலும் பௌத்தம் என்ற மதத்தின் பெயரால் இடம்பெரும் இனஅழிப்பு தான் மிகவும் கொடுமையானது.

அதாவது தமிழ் இனத்தின் தாயகம் சிதைக்கப்படுகின்றது. இதன் மூலம் ஒரு இனத்தின் தாயகக் கோட்பாட்டை அழித்துவிடலாம் என்பது உலக நடைமுறையில் இருந்து சிறீலங்கா கற்றுக்கொண்ட உத்தி. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு அவர்களின் தாயகப் பிரதேசங்களை காப்பாற்றி, அவற்றின் ஊடாக உரிமைகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை முதன்மைப்படும் நாடாளுமன்றக் குழு ஒன்றின் தேவை அவசியமாகின்றது.IMG 20200704 WA0079 தமிழ் இனம் தனது அரசியல் முதிர்ச்சியை காண்பிக்குமா?-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

கொங் கொங்கில் மேற்குலகம் கடைப்பிடிக்க முற்பட்டுநிற்கும் ஒரு நாடு இரு நிர்வாகங்கள் அல்லது இரு தேசங்கள் என்ற அதிக அதிகாரங்கள் கொண்ட நிர்வாகம் ஒன்று தமிழ் இனம் தனது இருப்பை தக்கவைப்பதற்கு தற்போது அவசியமானது.

1972 ஆம் ஆண்டு தமிழ் மக்களை ஆட்சிசெய்வதற்கான சட்டத் தகுதியை இழந்துவிட்ட சிறிலங்கா அரசு தற்போது சிறீலங்காவில் இனப்பிரச்சனை இல்லை எனவும்இ அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு பகிரமாட்டேன் எனவும் கூறிவரும் கருத்துக்களானது, அங்கு ஒரு உள்ளக சுயநிர்ணய உரிமையை பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை முற்றாகவே இல்லாது செய்துள்ளது.

எனவே தான் கொங் கொங்கில் மேற்கொள்ளப்பட்டது போல அனைத்துலக சமூகத்தின் உதவியுடன் வெளியக சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொள்ளும் நிலை தொடர்பில் ஈழத்தமிழ் இனம் தனது நகர்வை மேற்கொள்ள வேண்டும்.

சுயநிர்ணய உரிமை கொண்ட ஆட்சியை உள்ளக அல்லது வெளியக பொறிமுறைகளின் ஊடாக நடைமுறைப்படுத்த முடியும்.

உள்ளக சுயநிர்ணய உரிமை என்பது நாம் உள்நாட்டு அரசியல் அமைப்புக்களின் ஊடாக பெற்றுக்கொள்வது, ஆனால் ஒரு இனத்தின் சுயநிர்ணய உரிமையானது அவர்களை ஆட்சிசெய்யும் அரசினால் மறுக்கப்படுமாக இருந்தால் அந்த இனம் தனது உரிமைகளை அனைத்துலக சமூகத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்த முடியும் அது வெளியக சுயநிர்ணய உரிமையாகும்.

உள்ளக சுயநிர்ணய உரிமை மூலம் தமது சுயாட்சியை பெற்றுக்கொண்ட இனங்களுக்கான சிறந்த உதாரணங்களாக மேற்கு சகாரா, கற்றலொனியா ஆகியனவும் அண்மைய உதாரணங்களாக கிரைமியா மற்றும் விநெரோவும் உள்ளன. கிரைமியாவின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக உக்கிரேனில் வாழும் ரஸ்யர்கள் கூட வாக்களித்தது உக்ரேன் அரசையும், மேற்குலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் சில பூகோள வல்லாதிக்கப் போட்டிகளின் விளைவாக உருவாக்கப்பட்டவை. அவற்றில் சில சுயநிர்ணய உரிமைக்கு அப்பால் நகரமுடியாதவாறு பிராந்திய வல்லாதிக்க சக்திகளால் முடக்கப்பட்ட நிழைலயில் இருப்பவை.unnamed 1 தமிழ் இனம் தனது அரசியல் முதிர்ச்சியை காண்பிக்குமா?-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

எனவே தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும், அவர்களால் தனது இனத்திற்கு ஆற்றப்படும் பொருளாதார மற்றும் ஏனைய உதவிகளுக்கு அப்பால் தாயகத்தின் எல்லைகளையும், தமிழ் இனத்தின் இருப்பையும் காப்பாற்றும் நடவடிக்கையே தற்போது முக்கியமான தேவையாக உள்ளது. எனவே தான் முன்னைய பேச்சுக்களின் போது அபிவிருத்தி தொடர்பில் அக்கறை காண்பிக்காத தமிழ் இனம் தனது அரசியல் உரிமைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியிருந்தது.

எமது சுயநிர்ணய உரிமைகளை நோக்கி நாம் நகரவேண்டும் எனில் அதற்கு ஒரு பலமான தேசியப்பற்றுள்ள அரசியல் பிரதிநிதிகள் எமது இனத்திற்கு தேவை. அதனை உருவாக்கும் தகமையில் தான் தமிழ் மக்களின் அரசியல் முதிர்ச்சி என்பது வெளிப்படும்.

தமிழ் மக்கள் சார்பில் தற்போது களத்தில் குதித்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் அகியவற்றின் எண்ணிக்கை, அவர்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிறீலங்கா அரசுக்கு காலம் காலமாக சேவை செய்யும் தமிழ் ஒட்டுக்குழுக்கள் தொடர்பில் தமிழ் மக்கள் மிகப்பெரும் குழம்பம் அடைந்த நிலையில் இருக்கலாம். ஆனால் பல கட்சிகள் இருப்பது என்பது ஒரு ஜனநாயக நடைமுறையின் பண்பு, ஆனால் தமிழ்த் தேசியம் தொடர்பான கொள்கைகளில் அந்த கட்சிகள் அனைத்தும் கட்சி சாராது செயற்படுவதே அவர்களின் அரசியல் முதிர்ச்சியாக கொள்ளப்படும்.

பெருமளவான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதால் வாக்குகள் பிளவடையலாம் என்ற அச்சநிலையும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த அச்ச நிலையை சில கட்சிகள் தமக்கு சாதகமான பிரச்சாரத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கட்சிசாராது தமிழ்த் தேசியம் தொடர்பில் தொலைநோக்கு சிந்தனையுடன் தமிழ் மக்கள் சிந்திப்பார்களேயானால் இந்தமாயைகளில் இருந்து வெளிவருவதுடன், கட்சிகளை பார்க்காது தமிழ் இனத்தின் மீது பற்றுள்ளவர்களை இலகுவில் தேர்ந்தெடுக்க முடியும். அதன்மூலம் வாக்குகளை பிரிவடையாது தக்கவைக்கவும் முடியும்.050901killinochchi தமிழ் இனம் தனது அரசியல் முதிர்ச்சியை காண்பிக்குமா?-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

எல்லா மாவட்டங்களிலும், எல்லா மாகாணங்களிலும் ஒரு கட்சியை சார்ந்தவர்கள் தான் வரவேண்டும் என நாம் சிந்தித்தால் அதுவே எமக்கான தோல்வி. கட்சிகளின் கொள்கை தொடர்பில் ஆய்வு செய்தல், அவர்கள் நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் குறித்து ஆய்வு செய்தல், சுயேட்சை வேட்பாளர்கள் குறித்து ஆய்வுசெய்தல், முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூலம் இனம்பெற்ற நன்மைகள் தொடர்பில் ஆய்வுசெய்தல் என்பன எமக்கான சிறந்த வழியை காண்பிக்கும் என்பதுடன், நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தெளிவையும் எமக்குத் தரும்.தாவது யாரை தெரிவுசெய்யக்கூடாது என்ற தெளிவான சிந்தனையை எமக்கு தரும்.

தமிழ் இனம் மிகவும் தென்மைவாய்ந்த இனம், இந்த இனம் பெருமளவான புத்திஜீவிகளைக் கொண்டது, கல்வியறிவு சார்ந்த இனம், பொருளாதரத்திலும் வளர்ச்சிபெற்ற இனம் என்ற வார்த்தைகளை நாம் தினமும் கேட்கின்றோம். ஆனால் இவை அனைத்தும் எங்கு பிரதிபலிக்கும் என்பதை நாம் மறந்துவிடுகின்றோம். அதாவது நீங்கள் யாரை உங்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கின்றீhகளோ அவர்களே உங்கள் நாட்டில் உள்ள உங்கள் இனத்தின் அடையாளம். உங்கள் சமூக மேம்பாட்டின் அடையாளம்.

எனவே தற்போதைய நிலையில் நாம் கட்சிகள் சாராது, இனத்தின் விடுதலை மற்றும் சிறீலங்கா அரசின் தொடர் நடவடிக்கைகளால் விழுங்கப்படும் தமது தாயகப் பிரதேசங்களை தக்கவைப்பதற்கான பொறிமுறை போன்றவற்றை சிந்தித்து அதற்கு ஏற்ப பிரதிநிதிகளை தெரிவுசெய்வோமாக இருந்தால் அதுவே எமது இனத்தின் அரசியலின் முதிர்ச்சியாகும்.