Tamil News
Home செய்திகள் அரசியல் ரீதியான ஒப்பந்தங்கள் ஒதுக்கிவைக்கப்பட வேண்டும் -FUTA

அரசியல் ரீதியான ஒப்பந்தங்கள் ஒதுக்கிவைக்கப்பட வேண்டும் -FUTA

அரசியல் ரீதியான ஒப்பந்தங்கள் ஒதுக்கிவைக்கப்பட வேண்டும் அதேவேளை பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் (FUTA ) தெரிவித்துள்ளது.

நாட்டின் எதிர்காலம் குறித்து அரசாங்கம் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என FUTA இன் தலைவர் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தெரிவித்தார்.

ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி ஒருவர் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஆணை இல்லாத பிரதமரை ஏற்றுக்கொள்வது கற்பனை செய்ய முடியாதது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.குறிப்பாக இந்த நேரத்தில் ஒன்று திரண்ட மக்களுடன் அரசியல் விளையாட்டுகளை ஒதுக்கித் தள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version