மட்டு.நாவலடியில் அன்னை பூபதியின் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற அவரது பிள்ளைகளை அஞ்சலி செய்யவிடாது தடுத்தி நிறுத்திய காவல்துறையினர்

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற தங்களை, விடுதலைப் புலிகளிற்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாக   அன்னை பூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார்.

தியாகி அன்னை பூபதியின் 34 நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தசென்றவேளையே தங்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு சீலாமுனை பகுதியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் மகளின் வீட்டில் அவரது குடும்பத்தினர் அன்னை பூபதியின் திருவுருவபடத்திற்கு மலர் தூவி இரண்டுநிமிட அங்சலி செலுத்தினர்.

IMG 6860 மட்டு.நாவலடியில் அன்னை பூபதியின் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற அவரது பிள்ளைகளை அஞ்சலி செய்யவிடாது தடுத்தி நிறுத்திய காவல்துறையினர்

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு பூபதியின் மகள் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். இன்று எனது தாயாரான அன்னை பூபதியம்மாவின் 34 வது ஆண்டு நினைவு நாள் அதனையிட்டு நாவலடியில் அமைந்துள்ள அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எனது குடும்பத்தினர் சென்றோம் அப்போது அங்கு இருந்த காவல்துறையினர் எங்களை விசாரித்துவிட்டு நீதிமன்ற உத்தரவு என ஒரு பேப்பரை வாசித்துவிட்டு அவர் விடுலைப்புலிகளுக்காக உண்ணாவிரம் இருந்துள்ளர் எவரும் அஞ்சலி செலுத்த முடியாது என காவல்துறையினர் தெரிவித்து அங்கு அஞ்சலி செலுத்த செல்லவிடாது தடுத்தனர்.

எமது தாயார் அப்போது மட்டு அம்பாறை அன்னையர் முன்னணி சார்பில் அமைதியான முறையில் இந்திய இராணுவத்துக்கு எதிராக உண்ணாவிரம் இருந்தார் எனவும் என காவல்துறையினருக்கு எடுத்துரைத்தேன் இருந்தபோதும் எங்கள் மூன்று பேரையும் அங்சலி செலுத்த விடாது பொலிசார் தடுத்ததையடுத்து அங்கிருந்து வெளியேறி வீட்டிற்கு வந்துள்ளோம்.

கடந்த 3 வருடங்களுக்கு முதல் காத்தான்குடி காவல்துறையினர் நிலைய பொறுப்பதிகாரி அப்போது எனது தாயாருக்கு சென்று அஞ்சலி செலுத்தவேண்டும் அதற்கு தடை இல்லை எனவும் அவருடைய அஞ்சலியை தொடர்ந்து செய்துவரவேண்டும் அதற்கான உரிமை இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

எனவே எனது தாயாருக்கு அங்சலி செலுத்த பிள்ளைகளுக்கு உரிமை இல்லையா? எனவே இதற்கு நடவடிக்கை எடுத்துதரவேண்டும் அதேவேளை அன்னை பூபதியை வைத்து அவரின் பிள்ளைகளுக்கு உதவுவதாக எனது உறவினர் உட்பட சிலர் வெளிநாடுகளில் பணம் வசூலித்து மோசடி செய்கின்றனர்.

எங்களுக்கு எனது சகோதரங்களுக்கோ ஒரு உதவியும் தரப்படவில்லை அதேவேளை அரசியல் வாதிகள் உட்பட பலர் வந்து அன்னை பூபதியின் சமாதியை அபிவிருத்தி செய்வோம் பூங்கா அமைப்போம் சிலை வைப்போம் என தெரிவித்து வாக்குறுதி தந்துவிட்டு சென்றவர்கள் சென்றவர்கள் தான்.

எனவே இவ்வாறான நிலையில் இன்று நாங்கள் சென்று அஞ்சலி செலுத்துவதற்கு காவல்துறையினர் தடுத்து நிறுத்தியது மிகவும் மனவேதனையான விடையம் எனவே எதிர்வரும் காலத்தில்அன்னை பூபதியின் பிள்ளைகள் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காவது அனுமதியை பெற்றுத்தர அனைவுரும் உதவவேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

நன்றி- தினக்குரல் Tamil News