இளைஞர்களை தாக்கிய காவல்துறையினர் -தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்


நாட்டையும் நாட்டு பொதுமக்களையும் பாதுகாப்பாக வழிநடத்துகின்ற இந்த பாதுகாப்பு தரப்புக்கள் இவ்வாறு மிருக்கத்தனமாக தாக்குதல் நடாத்தினால் பொதுமக்கள் யாரை நாடி போவது எனவே இத்தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூரில் இரு இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடாத்திய சம்பவத்தை கண்டித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் ஊடக அறிக்கை ஒன்றை இன்று (23) வெளியிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே ஏறாவூர் மைலம்பாவெளி பகுதியில் நேற்றைய தினம் இரு இளைஞர்கள் வீதி போக்குவரத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு போக்குவரத்து காவல்துறையினரால் ஒருவரால் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற் கொண்டிருந்தார் உண்மையிலே இந்த மூர்கத்தனமான தாக்குதலை முதலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

அண்மையிலே வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் தாக்கப்பட்டனர் அதேவேளை இருதயபுரம் பகுதியில் ஒரு இளைஞன் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறே தொடர்ந்து பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றது இந்த தாக்குதல்களை பார்க்கும் போது சம்பவங்களை காவல்துறையினர் கையாளத் தெரியாது தங்களுக்கு ஏற்ற விதத்தில் கையாளுகின்றார்கள்.

எனவே நாட்டையும் நாட்டு பொதுமக்களையும் பாதுகாப்பாக வழிநடாத்துகின்ற இந்த தரப்புக்கள் வந்து இவ்வாறு மிருக்கத்தனமாக தாக்குதல் நடாத்தினால் பொதுமக்கள் யாரை நாடி போவது என்பதுதான் இன்றைக்கு இருக்கின்றது எனவே இப்படியான தாக்குதல்களை நிறுத்த வேண்டும். இந்த  சம்பவத்தில் தொடர்புடையவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad இளைஞர்களை தாக்கிய காவல்துறையினர் -தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்