Home உலகச் செய்திகள் டோக்யோ ஒலிம்பிக்: போட்டியில் இருந்து நீக்கப்பட்ட பெலாரஸ் வீராங்கனைக்கு வீசா வழங்கிய போலந்து

டோக்யோ ஒலிம்பிக்: போட்டியில் இருந்து நீக்கப்பட்ட பெலாரஸ் வீராங்கனைக்கு வீசா வழங்கிய போலந்து

belarus olympics1 facebookJumbo டோக்யோ ஒலிம்பிக்: போட்டியில் இருந்து நீக்கப்பட்ட பெலாரஸ் வீராங்கனைக்கு வீசா வழங்கிய போலந்து

கட்டாயப்படுத்தி நாட்டுக்கு அனுப்புவதாக முறைப்பாடு செய்த  பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனைக்கு போலந்து மனிதாபிமான விசா வழங்கியிருக்கிறது.

ஜப்பானிய காவல் துறையின் பாதுகாப்பில் ஒரு தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த 24 வயதான கிறிஸ்டினா டிமனோவ்ஸ்கயா, டோக்கியோவில் உள்ள போலந்து நாட்டு தூதரகத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளார்.

பயிற்சியாளர்களை விமர்சித்ததால் தன்னை வலுக் கட்டாயமாக விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆனால் உணர்ச்சி வயப்படும் நிலை காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக பெலாரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Exit mobile version