இலங்கையில் டிஜிட்டல் வாலெட் சேவையை அறிமுகப்படுத்த திட்டம்

இலங்கையில் டிஜிட்டல் வாலெட் சேவை

இலங்கையில் டிஜிட்டல் வாலெட் சேவை அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு அவர்களின் செல்பேசியுடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் வாலெட் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இலங்கையின் கம்பாவில் நடைபெற்ற லங்கா க்யூஆர் கோட் பேமென்ட் திட்ட அறிமுக விழாவில்     உரையாற்றிய அவர், இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை திட்டம் நாட்டில் 13 முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார். இந்த திட்டத்தை இலங்கை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியிருக்கிறது.

எதிர்காலத்தில் இந்த டிஜிட்டல் வாலெட் சேவை மூலம் பொதுமக்கள் தங்களுடைய பிறப்புச்சான்றிதழ், திருமண சான்றிதழ், தேர்வு சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்து, தேவைப்படும் இடங்களில் அவற்றை செல்பேசி வாயிலாக காண்பிக்கலாம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.