பயங்கரவாத திருத்தச் சட்டமூலத்தை சவால் செய்து உயர் நீதிமன்றில் மனு; மாற்று கொள்கைகளுக்கான நிலையம் தாக்கல் செய்தது


1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத திருத்தச் சட்டமூலத்தை திருத்துவதற்காக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட திருத்தச் சட்டமூலத்தை சவால் செய்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்தத் திருத்தச் சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பை மீறுவதாக தீர்ப்பளிக்குமாறு விசேட மனுவில் கோரப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அல்லது சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படவேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamil News