Tamil News
Home செய்திகள் காங்கேசன்துறை – தமிழ் நாடு இடையே சரக்குக் கப்பல் சேவைக்கு அனுமதி

காங்கேசன்துறை – தமிழ் நாடு இடையே சரக்குக் கப்பல் சேவைக்கு அனுமதி

கப்பல் சேவைக்கு அனுமதி: இந்தியா- தமிழ்நாடு மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான சரக்கு கப்பல் சேவையை முன்னெடுப்பது தொடர்பான அனுமதியை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, பாண்டிச்சேரி, காரைக்கால் துறைமுகங்களிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு மிக விரைவில் சரக்குகளை பரிமாறிக் கொள்ள முடியுமென  தெரிவிக்கப்படுகின்றது.

இதன் சேவை மூலம் மக்களுக்கு அவசியமான எரிபொருட்கள், உரம், பால்மா, மருந்துப் பொருட்கள் போன்ற  அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏற்கனவேவ திட்டமிட்டபடி, எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதியிலிருந்து, பலாலி விமான நிலையத்திலிருந்து திருச்சி மற்றும் சென்னை நகரங்களுக்கிடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version