Home செய்திகள் சோமாலியாவில் உணவின்றி மக்கள் தவிப்பு- ஐநா

சோமாலியாவில் உணவின்றி மக்கள் தவிப்பு- ஐநா

சோமாலியாவில் உணவின்றி மக்கள்

சோமாலியாவில் 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் போதிய உணவு மற்றும் குடிநீரின்றி தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

சோமாலியாவில் உணவின்றி மக்கள் தொடர்ந்து நான்காவது பருவமாக, இந்த ஆண்டும் போதிய அளவுக்கு மழை இல்லை. எனவே நீர் நிலைகளில் அதிவேகமாக நீர் குறைந்து வறட்சி அதிகரித்து வருகிறது.  கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் உணவு, குடிநீர், தங்கள் கால்நடைகளுக்கான உணவு ஆகியவை இல்லாமல் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

அடுத்த ஆண்டு, சுமார் 80 இலட்சம் பேர் உணவுப் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்க்கிறது.

சோமாலியாவில் கடந்த மூன்று தசாப்தங்களாக போர்கள் நடந்து வருகின்றன. மேலும் கடுமையான வறட்சி, வெள்ளம், பூச்சிகள் பயிரை அழிப்பது போன்ற பிரச்சனைகளையும் அந்நாடு எதிர்கொண்டு வருகிறது.

Exit mobile version