Home செய்திகள் மன்னாரில் குடி நீர் இன்றி தவிக்கும் மக்கள்

மன்னாரில் குடி நீர் இன்றி தவிக்கும் மக்கள்

IMG 20210802 WA0010 1 1 மன்னாரில் குடி நீர் இன்றி தவிக்கும் மக்கள்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஈச்சளவக்கை கிராமத்தில்  200 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர் என மன்னார் மருதம் மாதர் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,

“இந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு, வீதி சீரின்மை, தொழில் வாய்ப்பு,  போக்கு வரத்து வசதி இன்மை ஆகியப் பலவாறான பிரச்சினைகளுக்குள் இந்த மக்கள் சிக்கி தவிப்பதாகவும் இந்த நிலைமையில் இருந்து  கிராமத்து மக்களை மீட்டெடுக்க வேண்டும்.

ஈச்சளவக்கை பகுதியில்100 ஏக்கர் காணி, 200 குடும்பங்களுக்கு மேல் குறுகிய வட்டத்திற்குள்  வாழ்கின்றோம். இப்பகுதியில்  வடக்கு கிழக்கு இராணுவ கட்டுப் பாட்டு பயிற்சி முகாம்  இருக்கின்றது. தெற்குப்பக்கம் வனவள திணைக்களம் எல்லைக்கல் போட்டு உள்ளது. அதே நேரம் சன்னார் பள்ளமடுப் பகுதியில் கடல் எல்லை. இவ்வாறு ஒரு குறுகிய வட்டத்திற்குள் எங்களுடைய வாழ்வை தொலைத்து விட்டு  எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றோம்.

எங்களுக்கென்று வயல் காணிகளோ குளங்களோ இல்லை. இவற்றைப் பெற்று தரும் நோக்கம் அரசாங்கத்துக்கும் இல்லை.  எமது பெரியமடு பகுதியில் இருந்து எமது கிராமத்தை கடந்து விடத்தல்தீவு இலுப்பக்கடவை வரை குடிநீர் செல்கின்றது. ஆனால் ஈச்சளவக்கை மக்களுக்கு, யுத்தம் முடிந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகியும் குடிநீரைப் பெற முடியவில்லை.

இதனை அரசியல்வாதிகள்  கவனத்தில் எடுக்க  வேண்டும்.விவசாயம் செய்ய வயல் காணிகள் பெற்றுத்தந்து குளங்களை புனரமைத்து தருவதோடு வாழ்வாதாரத்தை நாங்களும்  பெற  உரிய வழிவகைகளை செய்து தரவேண்டும்” என வலியுறுத்தி யுள்ளனர்.

ரேவன் சாண்டர்ஸ்

Exit mobile version