Home செய்திகள் கிளிநொச்சி: பாலம் அமைத்துத் தரக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி: பாலம் அமைத்துத் தரக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

பாலம் அமைத்துத் தரக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச  செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு  மக்கள் இன்றைய தினம் பாலம் அமைத்துத் தரக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தனர்.

அப்பகுதி மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் ஏற்ப்பாட்டில் இந்த ஆர்ப்பாடம் இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தில் பிரதேச மக்கள்  தாம் பயன்படுத்தி வரும் குறித்த பதையில் உள்ள பாலத்தினை புதிதாக அபிவிருத்தி செய்து தருவதாக கடந்த மார்ச் மாதமளவில்  கடற்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவினால் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மழை காலம் வருவதற்கு முன்னர் புதியபாலம் அமைத்து தருவதாக கூறி  பயன் பாட்டிலிருந்த குறித்த பாலத்தினை முற்றாக  அகற்றியுள்ளனர்.

பாலம் அகற்றப்பட்டு பல மாதகாலம்  கடந்த நிலையிலும் பாலம் புனரமைப்பதற்கான எந்தவிதமான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படாத  நிலையில் மக்கள் இன்று போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

மக்கள் வைத்தியசாலைக்கு  செல்வதாயின்  நீண்ட தூரம் நடந்து சென்று நோயாளர் காவு வண்டியில் செல்லவேண்டி உள்ளதாகவும், மேலும் பாடசாலை  மாணவர்கள்  இந்த வீதியினால்  செல்லமுடியாத நிலை உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதிகளில் சட்டவிரோத மணல்  அகழ்வும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இது  தொடர்பாக  உரிய நடவடிக்கையை அரசியல் தலைவர்கள்   எடுக்க வேண்டும்  எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version