Home செய்திகள் பொதுக் கிணறு என்ற போர்வையில் சட்ட விரோத மண் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

பொதுக் கிணறு என்ற போர்வையில் சட்ட விரோத மண் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

சட்ட விரோத மண் அகழ்வு

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பங்குடாவெளி பெரியகொலனி பகுதியில் பொதுக்கிணறு அமைப்பதாக தெரிவித்து சட்ட விரோத மண் அகழ்வு இடம் பெறுவதற்கு எதிராக அக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பிரதேசத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதாக தேசிய குடிநீர் அதிகாரசபையின் வேலைத் திட்டத்தின் கீழ் குறித்த கிணறு கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

இருந்த போதிலும் மக்களின் எதிர்ப்பு காரணமாக குறித்த வேலைத்திட்டம் தற்க்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த கிணறு கட்டிமுடித்தால் அப்பிரதேசத்தில் வாழும் 500 குடும்பங்கள் நீர் தட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் அதிக அளவு மண் அகழப்படுகின்றபோதிலும் கிணறு என்ற போர்வையில் மண் அகழ்வு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version