முல்லைத்தீவு வட்டுவாகல் கடற்படைத் தளத்திற்கான காணிசுவீகரிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு

May be an image of 11 people, people sitting, people standing and outdoors

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள ‘கோட்டாபய கடற்படை கப்பல் ‘ கடற்படை முகாமுக்காக 617 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு  நடவடிக்கை   நேற்று (13) முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிந்த காணி உரிமையாளர்கள் பலர் கடற்படை முகாமிற்கு முன்னால் ஒன்றுகூடி எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்த நிலையில், இன்றும் குறித்த நடவடிக்கைக்கு எதிராக மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றினை அமைத்துள்ள கடற்படையினர் அந்த காணிகளை படை முகாமின் தேவைக்காக கடந்த சில வருடங்களாக நிரந்தரமாக சுவீகரிக்கும் பொருட்டு பல தடவைகள் நில அளவை திணைக்களத்தால் அளவீடு செய்ய எடுத்த முயற்சிகள் காணி உரிமையாளர்களான மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.

May be an image of 5 people, people standing, tree and road

காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 450) 05 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம் 2017 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வெளியாகிய வர்த்தமானியின் பிரகாரம் கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டுவாகல் மற்றும்  முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள 271.62 ஹெக்டெயர் விஸ்தீரனமுடைய காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது என வர்த்தமானி வெளியாகியிருந்ததோடு  காணி உரிமையாளர்களான மக்களை காணி ஆவணங்களோடு வருகைதந்து கடற்படை முகாமுக்கு காணியை வழங்க அளவீடுகளை செய்ய எல்லைகளை  அடையாளம்  காட்டுமாறு நில அளவை திணைக்களத்தால் பல தடவைகள் காணி உரிமையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டு அளவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகியிருந்தது.

May be an image of 9 people, people sitting, people standing and outdoors

காணி சுவீகரிப்பு தொடர்ச்சியான மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தமையால் அளவீட்டு பணிகள் இடம்பெற்றிருக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று (13)அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் இதற்க்காக சிறப்பான நில அளவையாளர் குழு ஒன்று கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு வருகைதரவுள்ளதாகவும் அறிந்த சில காணி உரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு காணியினை வழங்குவதற்கு எதிர்பினை தெரிவித்திருந்தார்கள்.

தமது பூர்வீக காணிகளை அரசாங்கம் தங்களுக்கு வழங்கவேண்டும் என்றும் தமது சொந்த நிலத்தில் வாழவே விரும்புவதாகவும் இழப்பீடோ அல்லது மாற்றுக் காணிகளையோ தாம் கோரவில்லை எனவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

IMG 4207 முல்லைத்தீவு வட்டுவாகல் கடற்படைத் தளத்திற்கான காணிசுவீகரிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு

மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் காணி அளவீட்டு நடவடிக்கைக்காக முல்லைத்தீவு மாவட்ட செயலக காணிப்பகுதியினர் மற்றும்  காவல்துறையினர்  குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்த போதிலும் நில அளவையாளர்கள் எவரும் பிரசன்னமாகியிருக்கவில்லை  அளவீடு இடம்பெறும் என அறிவித்தல் விடுத்து விட்டு நில அளவையாளர்கள் வருகை தராதது   இரகசியமான முறையில் அளவீடுகள் எவையும் இடம்பெறுகின்றதோ என தாம் சந்தேகிப்பதாகவும்  காணி உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

May be an image of 11 people, people standing, tree and outdoors

இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னாள் வடமாகாண சபை முன்னாள்  உறுப்பினர் து.ரவிகரன் ,சிவநேசன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் காணி உரிமையாளர்களோடு இணைந்து இந்த எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்றும் குறித்த காணிகளை அளவீடு செய்வதற்கு கடற்படையினர் இரகசியமான முறையில் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இடுபட்டிருந்ததோடு   மாவட்டச்செயலகத்தில் தமது காணிகளை மீட்டுத் தரக் கோரிய கோரிக்கைக்கடிதமும்  கையளிக்கப்பட்டுள்ளது.