Home செய்திகள் மாவீரர் நாளினை ஏனைய தேவைகளுக்காகப் பயன்படுத்த மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்-கதிர்

மாவீரர் நாளினை ஏனைய தேவைகளுக்காகப் பயன்படுத்த மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்-கதிர்

மாவீரர் நாளினை ஏனைய தேவைகளுக்காகப்

மாவீரர் நாளினை ஏனைய தேவைகளுக்காகப் பயன்படுத்த மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இராசையா கதிர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இராசையா கதிர்,

“தமிழ்மக்களின் தமிழ்தேசிய விடுதலைக்காக இந்த மண்ணில் இலங்கை அரசாங்கத்துடன் போராடி வீரமரணம் அடைந்த மாவீரர்களை நினைவு கொள்வதற்காக தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்ட நாளிலே அந்த மாவீரர் நாள் மண்ணில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. மாவீரர் நாள் என்பது ஒரு துக்க நாள் அல்ல. மாவீரர் நாள் ஒரு எழுச்சி நாளாகத்தான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

தமிழீழ வீடுதலைப்போராட்டத்தில் முதல் மரணித்த மாவீரன் சங்கர் அண்ணா அவர்கள் மரணித்த நேரத்தில் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் தமிழ் மக்களின் நலன் விரும்பிகள், புத்திஜீவிகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களின் அங்கிகாரத்துடன் நியமிக்கப்பட்ட மாவீரர் நாள், தமிழர்களின் தேசிய எழுச்சி நாளாக ஆண்டாண்டு காலம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தமிழினம் உலகத்தில் வாழும் வரை இந்த நாளில் எழுச்சி நாள் கடைப்பிடிக்கப்பட்டு வரும்.

இந்த நாள் தொடர்பில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வந்துள்ளது. ஒன்றிணைந்த ஆயர் இல்லங்கள் இந்த நாள் தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதுடன் கலந்துரையாடி இருப்பதாக அறிகின்றோம்.

உண்மையில் மாவீரர் நாள் தொடர்பாகவோ எமது விடுதலைப் போராட்டங்கள் தொடர்பாகவோ சம்மந்தப்படாத தரப்புக்கள் தீர்மானங்களை நிறைவேற்றுவது அனுமதிக்க முடியாது” என மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version