அச்சுவேலி ஆலய பகுதியில் இராணுவத்தினரின் செயலால் மக்கள் விசனம்

PHOTO 2021 07 24 06 22 56 1 அச்சுவேலி ஆலய பகுதியில் இராணுவத்தினரின் செயலால் மக்கள் விசனம்

அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு சாமி காவியும் உள்ளனர்.

ஆலயத்தினுள் மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல சில ஆலயங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில், இராணுவத்தினர் குறித்த ஆலயத்தின் வில்லு மண்டபம் வரையில் மேலங்கிகளுடன் சென்று வழிபட்டமை தொடர்பில்  சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நடைபெற்று வந்த நிலையில்  கடந்த வியாழக்கிழமை   தேர்த் திருவிழா இடம் பெற்றது.

கொரோனா அச்சம் காரணமாக சிறிய தேரில் பஞ்சமுக பிள்ளையார்   உள் வீதி  மட்டும் சுற்றப்பட்டது. அதன் போது பிள்ளையாரை இராணுவத்தினர் பிள்ளை தண்டில் காவி உள்வீதி உலா வந்தனர்.

கொரோனா அச்சம் காரணமாக ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் பலரும் ஆலயத்தினுள் உள்நுழைய அனுமதிக்கப்படாத நிலையில் பல இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன்  சுவாமி காவியும் உள்ளமை கடும் விமர்சனங்களுக்கு உள்ளகி உள்ளன.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021