”பெகசஸ் ஸ்பைவேர் விவகாரம் அச்சமூட்டும் வகையில் உள்ளது” ஐ.நா

skynews hack phone 5451811  ”பெகசஸ் ஸ்பைவேர் விவகாரம் அச்சமூட்டும் வகையில் உள்ளது” ஐ.நா

இஸ்ரேல் நாட்டின் பெகசஸ் ஸ்பேர்வோர் கொண்டு வேவு பார்க்கப்பட்டது மனித உரிமைக்கு எதிரானது என ஐ.நா மனித உரிமை ஆணையர் மிச்சேல் பாச்லேட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,“பெகசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் செயல் பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பலர் வேவு பார்க்கப் பட்டதாக வெளியாகும் தகவல் அச்சமூட்டும்  வகையில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும் “மக்களின் மனித உரிமைகளைச் சட்ட விரோத கண்காணிப்பு தொழில் நுட்பம் தவறாக பயன் படுத்துவது தொடர்பான அச்சத்தை உறுதிப் படுத்துவதாக தெரிகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் பல்வேறு கவலை தெரிவிக் கின்றனஎன அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பத்திரிகை யாளர்கள் மற்றும் மனித உரிமைகள் செயல் பாட்டாளர்களை கண்காணிக்க மென் பொருளைப் பயன் படுத்துவது, அவர்களை கைது செய்வது, அச்சுறுத்துவது மற்றும் கொலை செய்வதுடன் தொடர்புடையது. கண்காணிப்பு அறிக்கைகளின் அச்சத்தின் மூலம் மக்கள் தங்களை சுயதணிக்கை செய்து கொள்ள நிர்பந்திக்கப் படுவது போன்ற மோசமான விளைவுகளையும் கொண்டுள்ளது.

பத்திரிகை யாளர்களுக்கு, சமூக செயல் பாட்டாளர்களும் சமூகத்தில் தவிர்க்க முடியாத பங்கை வகிக்கின்றனர். அவர்கள் அமைதிப்படுத்துவது, நம் அனைவரையும் பாதிக்கும் ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கண்ணாணிப்பு நடவடிக்கைகளைக் குறுகிய வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் மட்டுமென நியாயப்படுத்த முடியும் என்பதை ஒரு நியாயமான இலக்குடன் அனைத்து அரசுகளுக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன். அந்த இலக்கு அவசியமானதாகவும் விகிதாசார ரீதியாகவும் இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021